355 கோடி ரூபா VAT செலுத்த தவறிய குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
15

355 கோடி ரூபா VAT செலுத்த தவறிய குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை

355 கோடி ரூபா VAT செலுத்த தவறிய குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை

W.M.மென்டிஸ் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க 6 மாத  சிறைத்தண்டனை விதித்து இன்று(14) தீர்ப்பளித்தார்.

 

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 355 கோடி ரூபா பெறுமதிசேர் வரியை(VAT) செலுத்தத் தவறியதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

2016 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதிசேர் வரியை செலுத்த உத்தரவிடுமாறு கோரி உள்நாட்டு இறைவரி ஆணையாளர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

2023 ஒக்டோபர் 14ஆம் திகதி உரிய வரிகளை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், உரிய தொகையை செலுத்தாத காரணத்தால் நீதவான் பிரதிவாதிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

அர்ஜுன் அலோசியஸ், அந்தனி ரன்தேவ் தினேன்ந்ர ஜோன், கே.பிரசன்ன குமாரசிறி டி சில்வா ஆகிய பிரதிவாதிகளுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

பிரதிவாதிகள் இதற்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜராகாததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் இன்று அந்த பிடியாணையின் பிரகாரம் அவர்கள் மன்றில் ஆஜராகினர்.

 

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் உரிய வரித்தொகையை இன்று செலுத்தாவிடின் 6 மாத கால சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என நீதவான் சுட்டிக்காட்டினார்.

 

அதற்கிணங்க விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

எவ்வாறாயினும், பிற்பகல் 2.30 மணியளவில் தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்துள்ளதாக மீண்டும் நீதவானிடம் தெரிவித்தனர்.

 

குறித்த பிணை விண்ணப்பத்திற்கு உட்பட்டு தமது சேவைபெறுநர்களை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

 

அத்துடன், செலுத்த வேண்டிய வரியை தவணை முறையில் செலுத்த அனுமதியளிக்குமாறும் மனுதாரர்களால் மேன்முறையீட்டின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

எனினும் இந்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.

views

146 Views

Comments

arrow-up