கண்டி மாவட்டத்திற்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய அரசியல் தொழிற்சங்க அமைப்பாளர் நியமனம்

கண்டி மாவட்டத்திற்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்று(08) நியமிக்கப்படுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் கண்டி மாவட்டத்திற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் சிரேஷ்ட அமைப்பாளராக செயற்பட்டுள்ளதாக அதன் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக பாரத் அருள்சாமி கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு நேற்று(07) கடிதம் அனுப்பியிருந்தார்.
148 Views
Comments