ஜனாதிபதி அனுரவிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
01

ஜனாதிபதி அனுரவிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து

ஜனாதிபதி அனுரவிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இதன்போது அமெரிக்க தூதுவர்  தனது  வாழ்த்துகளை இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர குமார திசாநாயக்கவிற்கு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இரு தரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து இந்த சந்தர்ப்பத்தில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை வௌிப்படுத்தக்கூடிய துறைகள் ஆகிய விடயங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

views

128 Views

Comments

arrow-up