நுவரெலியா தபாலகம் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் கூறும் விடயம்

நுவரெலியா தபாலகம் மற்றும் காணி என்பன தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு அன்றி வேறு எந்தவொரு நடவடிக்கைக்கும் வழங்கப்பட மாட்டாதென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
150 ஆம் ஆண்டு தபால் தின நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று நடைபெற்றது.
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
138 Views
Comments