மலையக மார்க்க ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

மலையக மார்க்க ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாளை(09) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து எல்ல ரயில் நிலையம் வரையே ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தோ - ஶ்ரீ லங்கா கூட்டு படப்பிடிப்பு செயற்றிட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
135 Views
Comments