பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
15

பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை

பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக(CD) வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

2024 பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினாலும் இந்த இறுவட்டினை(CD) பெற்றுக் கொள்ள முடியுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

பொதுத்தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளரினால், அதிகாரமிக்க பிரதிநிதியினால், சுயேட்சை குழுவின் தலைவரினால் அல்லது வேட்பாளரின் எழுத்துமுல கோரிக்கையின் அடிப்படையில் இறுவட்டை(CD) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

 

வாரநாட்களில் உரிய கட்டணத்தை செலுத்தி பிரதான அலுவலகத்தில் அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இறுவட்டாக பெற்றுக் கொள்ள முடியுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

views

158 Views

Comments

arrow-up