கண்டி மற்றும் எத்துல்கோட்டே பகுதிகளில் 31 சீனப் பிரஜைகள் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
15

கண்டி மற்றும் எத்துல்கோட்டே பகுதிகளில் 31 சீனப் பிரஜைகள் கைது

கண்டி மற்றும் எத்துல்கோட்டே பகுதிகளில் 31 சீனப் பிரஜைகள் கைது

கண்டி மற்றும் எத்துல்கோட்டே பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்குமிடங்களைப் பெற்றிருந்த 31 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கண்டி - அனிவத்த பகுதியில் ஹோட்டலொன்றில் இருந்து கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளில் பெண்ணொருவரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நேற்று முன்தினம்(12) கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளுடன் இவர்கள் தொடர்பைப் பேணியிருந்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

எத்துல்கோட்டே பகுதியில் தொடர் மாடிக் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளில் 04 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

கண்டி - பல்லேகல - நத்தரன்பொத்த பகுதியில் 126 சீன பிரஜைகளும், 02 வியட்நாம் பிரஜைகளும், தாய்லாந்து பிரஜையொருவரும் நேற்று முன்தினம்(12) கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

கடந்த 2 நாட்களில் மாத்திரம் குறித்த பகுதிகளில் கைது செய்யப்பட்ட 161 வௌிநாட்டவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

views

165 Views

Comments

arrow-up