யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 வீதமளவில் நிறைவடைந்துள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
21

யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 வீதமளவில் நிறைவடைந்துள்ளது

யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 வீதமளவில் நிறைவடைந்துள்ளது

நாடளாவிய ரீதியில் வனப்பாதுகாப்பு எல்லைகளை வரையறுத்து யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதுவரை 5500 கிலோமீட்டர் உள்ளடங்கும் வகையில் யானை வேலி அமைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

 

மேலும் 1500 கிலோமீட்டருக்கான யானை வேலியை அமைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

யானை வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் அவற்றை பராமரிப்பதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோரை ஈடுபடுத்தவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன் சட்டவிரோதமான முறையில் யானை வேலிகளை அமைத்துள்ளவர்களை இணங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

views

143 Views

Comments

arrow-up