இலங்கை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
07

இலங்கை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஓமானில் நடந்த முதல் டி 20 போட்டியில் இலங்கை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஓமானை வென்றது.

 

நாணய சுழற்சியில் வென்ற ஓமான் கேப்டன் நீஷாம் மக்சூத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.

 

அவிஷ்கா பெர்னாண்டோ (83) மற்றும் கேப்டன் தசுன் ஷானக (51) இலங்கை அணியின் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்தனர்.

 

பதிலுக்கு, ஓமான் 23 ஓட்டங்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

 

நசீம் குஷி 22 பந்துகளில் 40 ஓட்டங்களும், முகமது நயீம் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.

 

லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், சாமிகா கருணாரத்ன மற்றும் நுவன் பிரதீப் தலா 2 விக்கெட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

 

இரண்டு போட்டிகள் கொண்ட ஓமான்-இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.

views

253 Views

Comments

arrow-up