மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கஜ்ஜா என அழைக்கப்படும் அனுர விதான கமகே மற்றும் அவரது 2 பிள்ளைகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் துப்பாக்கிதாரி பயணித்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் இன்று(25) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னையிலிருந்து நாட்டிற்கு திரும்பிய போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அனுர விதான கமகே மற்றும் அவரது 2 பிள்ளைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
116 Views
Comments