மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - சந்திவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு - சந்திவெளி பகுதியில் நேற்று(18) மாலை 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.
இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 27 வயதான இளம் குடும்பஸ்தர் மற்றும் 19 வயதான இளைஞர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த மற்றுமொரு நபர் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6 Views
Comments