தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்படவுள்ளது.
முதல் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருக்கும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த காலப்பகுதி வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை பகுதிகளில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சு கண்டறிந்துள்ளது.
மீன்வளத்தை பெருக்கும் நோக்கத்தில் இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் 2,000 விசைப்படகுகள் மீன்பிடி இறங்குதளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்படும்.
மீன்பிடித் தடைக்காலத்தின் போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீனவ குடும்பங்களுக்கு தலா 8,000 இந்திய ரூபா வழங்கப்படுகின்றது.
9 Views
Comments