மரணத்தில் முடிந்த தந்தை - மகன் மோதல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
20

மரணத்தில் முடிந்த தந்தை - மகன் மோதல்

மரணத்தில் முடிந்த தந்தை - மகன் மோதல்

கொழும்பு - கிராண்ட்பாஸ் ஒருகொடவத்த பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு(18) ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மோதலின் போது காயமடைந்த தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேகநபரான 20 வயதான மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

views

7 Views

Comments

arrow-up