10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்பு கண்டுபிடிப்பு

10 கோடி ஆண்டுகள் பழமையான சிறிய டைனோசரின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பண்டைய கால உயிரியல் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், விஞ்ஞானிகள் மியான்மரில் கண்டுபிடித்த ஒரு டைனோசர் போன்ற சிறிய தலையை 99 மில்லியன் அதாவது சுமார் 10 கோடி ஆண்டுகள் பழமையான அம்பர் படிமத்தில் (Amber) முழுமையாக பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
இது உலகின் மிகச் சிறிய டைனோசராகக் கருதப்படுவதுடன் இந்த விலங்கிற்கு "Oculudentavis khaungraae" என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கபட்ட டைனோசர் ஒரு ஹம்மிங் பறவையைக் காட்டிலும் சிறியது என்றும் பறவைகளுக்குத் தாயான டைனோசர் வகையைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.
இதன் சிறிய தலையில் 100-க்கும் மேற்பட்ட கூர்மையான பற்கள், புழுங்கிய பாரிய கண்கள் மற்றும் ஒளிரும் எலும்பமைப்பு உள்ளிட்ட அபூர்வ அம்சங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த டைனோசரின் பற்கள் அதன் தலையில் மிகச் சிறிய அளவிலும், அதிக எண்ணிக்கையிலும் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜிங்மை (Jingmai O’Connor),“ இது நேற்று தான் செத்ததுபோல் தோன்றுகிறது.” என தெரிவித்துள்ளார்.
6 Views
Comments