தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் போது குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பது அவற்றை காணொளியில் பதிவு செய்வது அல்லது அவற்றை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இதுபோன்ற செயல்களில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அனைத்து சமூக வலைத்தள கணக்கு வைத்திருப்பவர்களும் நிர்வாகிகளும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து செயற்பாடுகளும் தயாரென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க(Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில்(Royal College of Colombo) இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆணையாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாளை வாக்களிக்கத் தேவையான வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து இரகசிய ஆவணங்களும் உரிய நிலையங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
146 Views
Comments