84 வீத வாக்காளர் அட்டை விநியோகம் - தபால் திணைக்களம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளில் 84 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு கோடியே 45 இலட்சம் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அருகிலுள்ள தபால் நிலையங்களில் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க கூறினார்.
144 Views
Comments