தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த ஒத்துழைப்பு வழங்கும் இடர் முகாமைத்துவ நிலையம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை அனர்த்தங்களினால் பாதிக்கப்படாத வகையில் நடத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏதேனுமொரு அனர்த்தம் காரணமாக எந்தவொரு பிள்ளையும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடையாக இருப்பின் இடர் முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 க்கு அறிவிக்க முடியும்.
இதனை தவிர,
0113 66 80 20
0113 66 8100
0113 66 80 13
0113 66 80 10 மற்றும் 076 3 117 117 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கும் அறிவிக்க முடியும்.
இந்த விசேட தொலைபேசி இலக்கங்கள் இன்றும்(14) நாளையும்(15) மாத்திரம் இயங்கும் என இடர்முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.
148 Views
Comments