2025 ஆம் ஆண்டு பாடசாலை தவணை குறித்த அறிவிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
15

2025 ஆம் ஆண்டு பாடசாலை தவணை குறித்த அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு பாடசாலை தவணை குறித்த அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

இன்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

 

அடுத்த ஆண்டில் ஜனவரி 02 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

 

2025 ஜனவரி 20 ஆம் திகதி  அடுத்த ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வௌியிடப்படும் என அவர் கூறினார். 

views

176 Views

Comments

arrow-up