ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
05

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட அரச ஊழியர்களின் முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்புகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு  இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

ஊடகவியளாரகளிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin), சுற்றறிக்கையை வெளியிடுவது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தொடர்ந்தும் அவர் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அரசியல் மேடைகளில் கூறுவது உண்மையாக இருக்குமானால், தேர்தல் திகதிக்கு முன்னதாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.

 

எவ்வாறாயினும், ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை இலக்காகக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

 

சம்பள முரண்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கணிசமான இடத்தைப் பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில், சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது, ​​அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை, ஆனால் அவர்களுக்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தியது.

 

இது தொடர்பாக பல்வேறு அரசியல் மேடை விவாதங்கள் இந்த நாட்களில் பல்வேறு வேட்பாளர்களால் நடத்தப்படுகின்றன.

 

முன்னதாக, தேவையான சம்பள அதிகரிப்புக்கு VAT அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார், ஆனால் இப்போது அரசாங்கம் உடனடி சம்பள அதிகரிப்புக்கு செல்ல பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது” என விமர்சித்துள்ளார்.

views

143 Views

Comments

arrow-up