இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நாட்டிற்கு விஜயம்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று(29) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று காலை பாத் பைன்டர் அமைப்பின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொடவை சந்தித்தார்.
இதன்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச திட்டங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கியுள்ளா்.
வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய பிரிவுகளின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகள் வலுப்பெற்று இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3 வீதத்தில் இருந்து 6 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
164 Views
Comments