பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சாரதி துஷ்மந்த ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு

பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் தேர்தல் அலுவலகத்தில் இன்று(23) காலை ஜனாதிபதியை சந்தித்து அவர்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்படுவதுடன் சாரதி துஷ்மந்த மித்ரபால அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக செயற்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்திலிருந்து அங்கஜன் இராமநாதன் பாராளுமன்றத்திற்கு தெரிவானதுடன் சாரதி துஷ்மந்த மித்ரபால கேகாலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
155 Views
Comments