தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
23

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று(23)  மாலை வௌியாகின.

 

WWW.DOENETS.LK  அல்லது WWW.RESULTS.EXAMS.GOV.LK எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பயன்படுத்தி பரீட்சை பெறுபேறுகளை நாளை முதல்  பதிவிறக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 323,900 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

 

இவர்களில் 51,244 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

 

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் பல கேள்விகள் பரீட்சைக்கு முன்பதாகவே வௌியானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 

இதற்கமைய வினாத்தாள் வௌியான சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் விடைத்தாளை மதிப்பிட்டு பெறுபேறுகளை வெளியிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

views

67 Views

Comments

arrow-up