மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் துப்பாக்கிச்சூடு இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் இன்று(16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று(16) காலை 9.20 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தவர்களே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
78 Views
Comments