கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட Saif Ali Khan-இன் நிலைமை கவலைக்கிடமாக இல்லை - மும்பை வைத்தியசாலை

பிரபல பொலிவூட் நடிகர் Saif Ali Khan மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையிலுள்ள அவரின் இல்லத்தில் இன்று(16) அதிகாலை 2.30 அளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சிகிச்சை பெற்றுவரும் Saif Ali Khan-இன் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென மும்பை வைத்தியசாலை தற்போது அறிவித்துள்ளது.
Saif Ali Khan மீது 4 தடவைகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையிலுள்ள Saif Ali Khan, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
77 Views
Comments