பசறையில் விபத்திற்குள்ளான பஸ்ஸை நடத்துனர் செலுத்தியுள்ளார்

பசறை 10ஆம் கட்டைப் பகுதியில் விபத்திற்குள்ளான பஸ்ஸை குறித்த பஸ்ஸின் நடத்துனரே செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் நடத்துனருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த பஸ் இன்று(11) காலை 6 மணியளவில் பசறை 10ஆம் கட்டைப் பகுதியில் விபத்திற்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
பசறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோரில் 7 வயதான சிறுவனும் அவரின் தாயாரும் அடங்குகின்றனர்.
பஸ் விபத்திற்குதகுள்ளான சந்தர்ப்பத்தில் பஸ் நடத்துனரே பஸ்ஸை செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
68 Views
Comments