வெலிகம - கப்பரதொட்ட - வல்லிவெல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 வயது இளைஞர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
05

வெலிகம - கப்பரதொட்ட - வல்லிவெல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 வயது இளைஞர் உயிரிழப்பு

வெலிகம - கப்பரதொட்ட - வல்லிவெல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 வயது இளைஞர் உயிரிழப்பு

வெலிகம - கப்பரதொட்ட - வல்லிவெல வீதியில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயது இளைஞர் உயிரிழந்தார். 

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத சிலர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த 5 பேர் மீது இந்த துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக பொலிஸார் கூறினர். 

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

ஏனைய மூவருக்கும் பாதிப்பில்லை எனவும் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள 3 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

views

64 Views

Comments

arrow-up