இலாபமீட்டாத டிப்போக்கள் தொடர்பில் அரசின் தீர்மானம்

இலாபமீட்டும் மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ முகாமையாளர்களுக்கு அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்தது.
அவ்வாறு செய்யத்தவறும் நபர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர், டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
தற்போது காணப்படும் 107 டிப்போக்களில் 60 வரையான டிப்போக்கள் மூலம் மாத்திரமே இலாபம் கிடைப்பதாக பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
205 Views
Comments