ஓமான் கடலில் கப்பல் கவிழ்ந்ததில் இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளனர்

கொமோரஸ் நாட்டு கொடியுடன் ஓமான் கடற்பிராந்தியத்தில் பயணித்த எண்ணெய் கப்பல் மூழ்கியதில் இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
யேமன் துறைமுகமான ஏடனை நோக்கி பயணித்த கப்பல், ஓமானின் முக்கிய தொழில்துறை துறைமுகமான டுக்மில் பகுதியில் வைத்து கவிழ்ந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, கப்பலில் பயணித்த 16 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் இதில் 3 இலங்கையர்களும் 13 இந்தியர்களும் உள்ளடங்குவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஓமான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
206 Views
Comments