ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கிறது

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(11) முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த பல அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பதவியுயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம்(09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.
எவ்வாறாயினும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சேவையை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் என பதில் ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே அறிவித்தருந்தார்.
ரயில்வே பொது முகாமையாளரின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்தனர்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று 250 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
60 ரயில் சேவைகள் மாத்திரமே நேற்று(10) சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
207 Views
Comments