நாட்டின் பல பகுதிகளிலும் மழை

மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டகளப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மலையக பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பின் சில பகுதிகளில் நேற்று(04) மாலை வீசிய கடும் காற்றினால் சில வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மண்முனைபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று(04) மாலை மழையுடன் பலத்த காற்று வீசியதால் சில வீடுகளின் கூரைத் தகடுகள், வர்த்தக நிலையங்களின் கூரைத் தகடுகள் சேதமடைந்தன.
198 Views
Comments