கட்டளையை மீறி பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

மஹஓய, டேம்பிட்டிய பிரதேசத்தில் கட்டளையை மீறி பயணித்த லொறியொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
அனுமதி பத்திரின்றி மரக்குற்றிகளை கொண்டு சென்ற லொறியொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் தப்பிச் சென்றுள்ளனர்.
மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
201 Views
Comments