பாரிந்த ரணசிங்கவை சட்ட மாஅதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்ட மாஅதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(11) கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க அண்மையில் பதில் சட்ட மாஅதிபராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
209 Views
Comments