'Eagle's View Point' சுற்றுலாப்பயணிகளுக்காக திறந்து வைப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
27

'Eagle's View Point' சுற்றுலாப்பயணிகளுக்காக திறந்து வைப்பு

'Eagle's View Point' சுற்றுலாப்பயணிகளுக்காக திறந்து வைப்பு

நுவரெலியா - சாந்திபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 'Eagle's View Point'  திறந்துவைக்கப்பட்டது.

 

வௌிவிவகார, வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

 

இலங்கையின் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிராமமாக கருதப்படும் நுவரெலியா - சாந்திபுர கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 6,182 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

 

இலங்கை விமானப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 'Eagle's View Point'-ஐ திறந்துவைக்கும் நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸவும் கலந்து கொண்டார்.

 

இந்த திட்டத்திற்கான நிதியுதவியை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

68 Views

Comments

arrow-up