ஒன்லைன் ரயில் பயணச்சீட்டு மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஒன்லைன் ரயில் பயணச்சீட்டு மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களம் தொலைபேசி நிறுவனமொன்றுடன் இணைந்து விநியோகிக்கும் ஒன்லைன் ஆசன ஒதுக்கீட்டு பயணச்சீட்டை உடனடியாகப் பெற்று அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான துரித விசாரணை அறிக்கை விரைவில் முன்வைக்கப்படுமென குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், கொழும்பு பிரதம நீதவானிடம் உறுதியளித்தனர்.
68 Views
Comments