நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு 5 நிறுவனங்களுக்கு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
20

நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு 5 நிறுவனங்களுக்கு

நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு 5 நிறுவனங்களுக்கு

நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம், விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம், உணவுத் திணைக்களம் உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு இந்தப் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

 

குறித்த நிறுவனங்களின் ஊடாக உற்பத்தி செலவினங்களை கணக்கீடு செய்து நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

 

உற்பத்தி செலவுகளைக் கணக்கிடும் போது உர நிவாரணத்தை கருத்திற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.  

 

விரைவில் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை அறிவிக்கப்படுமென அவர் கூறினார்.

 

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளுக்கு நெல்லைக் கொண்டு சென்று விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஒரு கிலோகிராமுக்கு 2 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. 

views

67 Views

Comments

arrow-up