நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
26

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சந்தையில் நிர்ணய விலைக்கு அமைவாக அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மாவட்ட ரீதியில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் M.M. நயிமுதீன் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் 218 ரூபாவுக்கு நாட்டரிசியை சந்தைக்கு விநியோகிக்க இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதன்படி நாட்டரிசியை 220 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணய விலை அறிவிக்கப்பட்டது.

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 

views

126 Views

Comments

arrow-up