நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோருக்கு பிணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
23

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோருக்கு பிணை

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோருக்கு பிணை

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரின் மனைவி உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

நால்வரும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் இன்று(21) ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

25,00,000 ரூபா பெறுமதியான 02 சரீரப்பிணைகளில் இவர்களை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

 

சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தனர். 

 

2014 ஆம் ஆண்டு 6 தசம் ஒரு மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பிங்கிரிய, நாரம்மல பகுதிகளில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போர்வையில்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அமைச்சர் பெற்றுக்கொண்ட  61 இலட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபா நிதி  நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படாமல்  2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதற்கமைய சட்ட மாஅதிபரின் ஆலோசனை பிரகாரம் பொது நிதி, பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் நேற்று(22) கைது செய்யப்பட்டார்.

views

87 Views

Comments

arrow-up