கொரோனா பற்றி கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் விளக்கம்
Latest_News
calendar
JUN
20

கொரோனா பற்றி கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் விளக்கம்

கொரோனா பற்றி கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் விளக்கம்

தெகிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கமொன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால்  விலங்குகள் மூலம் வைரஸ் தொற்று ஏற்படும் என்ற வதந்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை கால்நடை வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக  வைத்தியர்கள் நடத்திய ஆய்வின்படி,  கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை அடையாளம் காணவில்லை என்று அதன் தலைவர் வைத்தியர் எரந்திக்க குணவர்தன தெரிவித்துள்ளார். 

 

"கால்நடை மருத்துவ பீடத்தில் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறையின் பேராசிரியர் திலன் சதரசிங்கத்தின் கீழ் தற்போது பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு தங்கள் வீடுகளில் வாழும் செல்லப்பிராணிகளிடமிருந்து பரவக்கூடிய எந்த சந்தர்ப்பமும் உலகில்  பதிவாகவில்லை  என்பதே பொதுமக்களுக்கான  செய்தியாகும். ஆனால் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.”

 

 

 

 

 

 

 

 

source:adaderana

views

29 Views

Comments

subscribe
arrow-up