எரிந்த எம்.வி. எக்ஸ்-பிரஸ் பர்ல் கப்பலின் கேப்டன் கைது
Latest_News
calendar
JUN
14

எரிந்த எம்.வி. எக்ஸ்-பிரஸ் பர்ல் கப்பலின் கேப்டன் கைது

எரிந்த எம்.வி. எக்ஸ்-பிரஸ் பர்ல் கப்பலின் கேப்டன் கைது

எரிந்த எம்.வி. எக்ஸ்-பிரஸ் பர்லின் கேப்டன் குற்றவியல் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

 

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கப்பலின் கேப்டன், இன்று (14) பிற்பகல் கொழும்பு உயர் நீதிமன்ற எண் 01 க்கு முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்  என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், டி.ஐ.ஜி. அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

 

அண்மையில் கொழும்பு கடற்கரையில் நங்கூரமிட்டபோது எம்.வி எக்ஸ்-பிரஸ் பர்ல் தீ பிடித்தது.

 

ஜூன் 1 ம் தேதி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கப்பலின் கேப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் உதவி பொறியியலாளர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

 

கப்பல் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றவியல் புலனாய்வுத் துறையின் கோரிக்கையை பரிசீலித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

இதற்கிடையில், கப்பலின் கேப்டன் மற்றும் குழுவினரிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்ய குற்றவியல் புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.


 

source:newsfirst

views

88 Views

Comments

subscribe
arrow-up