“எதிர்கால வாகன வாடிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர்” - சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA)
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
07

“எதிர்கால வாகன வாடிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர்” - சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA)

“எதிர்கால வாகன வாடிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர்” - சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA)

உள்ளூர் பொருளாதாரத்தில் பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, கொரோனா தொற்றுநோய் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நேரத்தில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்த நடவடிக்கைகளில், பலரின் கவனத்தை ஈர்த்துள்ள வாகனங்களின் இறக்குமதியை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு அவ்வப்போது பல்வேறு ஊடகங்களில் விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. உள்ளூர் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், அந்நிய செலாவணி இருப்புக்களை நிர்வகிக்கவும், ரூபாயை சீராக வைத்திருக்கவும் அரசாங்கம் எடுத்த இந்த முடிவை சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் (CMTA), நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

 

எவ்வாறாயினும், பயன்படுத்தப்பட்ட வாகன பாகங்களைப் பயன்படுத்தி வாகனங்களை ஒன்று சேர்க்க அனுமதிக்கும் அமைச்சரவை தீர்மானத்தை அரசாங்கம் அண்மைய காலங்களில் பரிசீலித்து வருவதாகவும், அது நிறைவேற்றப்பட்டால், பல சட்டங்கள் மீறப்படும் என்றும் எங்களுக்குத் தெரிகிறது. எதிர்காலத்தில், இதன் மூலம் வாகனங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் ஆயுள் குறித்து நுகர்வோர் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால், CMTA இந்த முடிவு குறித்து மிகவும் வருந்துகிறது மற்றும் அதை கடுமையாக எதிர்க்கிறது. அத்தகைய வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும் என்பதால், நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படலாம் என்பதைக் காண்கிறோம்.

 

இது குறித்து CMTA தலைவர் யசேந்திர அமரசிங்க கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்,

 

"அரசாங்கத்தின் இந்த தீர்மானம் இறுதியில் நுகர்வோர் மீது பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. விசேடமாக, முன்னர் பயன்படுத்தப்பட்ட வாகன பாகங்களின் நிலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், இவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்ட வாகனங்கள் வீதி விபத்துக்கள் மற்றும் தீ விபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.. இறுதியில், எங்கள் வாடிக்கையாளர்களே அனைத்து எதிர்மறையான விளைவுகளையும் சுமக்க வேண்டும். மேலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அரசாங்கம் பல பில்லியன் வரிகளை இழக்கக்கூடும். ”

 

இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு முன்னர் பலரால் திறக்கப்பட்ட கடன் கடிதங்களை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ள வேளையில், அத்தகைய தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றுவது மிகவும் நியாயமற்றது என்றும் CMTA சுட்டிக்காட்டுகிறது. மேலும், மார்ச் மாதத்தில் CMTA, டாக்டர் பி. பி. ஜெயசுந்தேரவின் வேண்டுகோளின் பேரில், இந்த துறையின் இருப்பு மற்றும் வேலையின்மை ஆகிய காரணங்களை மையமாக கொண்டு வாகன இறக்குமதிக்கான ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்துமாறு ஆலோசனை ஒன்றை முன்வைத்திருந்தது. இந்தத் துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், போக்குவரத்து விலைகள் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் CMTA அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

 

1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) உள்நாட்டில் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வாகன உற்பத்தியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை வர்த்தக சபையுடன் இணைந்த ஒரே வர்த்தக நிறுவனமாகும். இது ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் சிரேஷ்ட மோட்டார் வர்த்தக சங்கமாகும். CMTA பல்லாயிரக்கணக்கான இலங்கை குடிமக்களை சேவைகளில் அமர்த்தி பயிற்சி அளிப்பதோடு பொறியியல் மற்றும் நிர்வாகத்தில் சிறந்த சர்வதேச பயிற்சிகளை வழங்குவதன் மூலம் சர்வதேச அளவில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறும் மக்களை உருவாக்குவதற்கு பங்களிக்கிறது. அனைத்து CMTA உறுப்பினர்களும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கார் உற்பத்தியாளர்களால் முறையாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்கள் இறக்குமதி செய்யும் வாகனங்கள் தொழிற்சாலையிலிருந்து நேரடியாக அனுப்பப்படுவதோடு நாட்டின் குறிப்பிட்ட நிலைமைகளான எரிபொருள் தரம், சாலை நிலைமைகள் மற்றும் காலநிலை போன்றவற்றை பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய வாகனங்கள் எப்போதும் உற்பத்தியாளரின் முழு உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. இதன்படி, கார் உரிமையாளர்களுக்கு அவர்களின் காரின் தரம், பாதுகாப்புத் தரங்கள் மற்றும் ஆயுள் குறித்து எந்த சந்தேகமும் இல்லாமல் நம்பத்தகுந்த வகையில் செயல்பட முடியும் என்பதால் இது அவர்களுக்கு முழு மன சுதந்திரத்தை அளிக்கிறது.

 

 

 

 

 

 

source:biz.derana

views

243 Views

Comments

arrow-up