தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
14

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்

எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

பஸ் கட்டணத்தை ஒரு ரூபாயால் கூட அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் மக்களுக்கு இயலுமானவரை பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டதாக எனவும் அவர் கூறியுள்ளார்.

 

பயண தடைகள் காரணமாக பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த காலங்களில் பஸ் கட்டணத்தில் 20% திருத்தம் இருந்ததால் இந்த முறை கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

 

இருப்பினும், பஸ் உரிமையாளர்களுக்கு கடந்த காலங்களில் உரிமையாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டமை லீசிங் வசதிகளில் வழங்கப்பட்ட சலுகைகளை போன்ற ஒன்றையோ அல்லது எரிபொருள் மானியம் ஒன்றையோ வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

எரிவாயு விலை குறித்து வெளியுறவு அமைச்சர் லசந்த அலகியவண்ண தனது கருத்துக்களை தெரிவித்தபோது, உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இலங்கையில் நேரடி தாக்கம் இருந்தபோதிலும், எரிவாயு விலையை அதிகரிக்க அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மாலக விக்ரமசிங்க, இலங்கை மின்சார சபைக்குள் செயலில் உள்ள மாஃபியா காரணமாக எதிர்காலத்தில் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

 

ஊழல் அரசியல்வாதிகள், வக்கிர வணிகர்கள், சந்தர்ப்பவாத வல்லுநர்கள் மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள் ஆகியோரை இலங்கை மின்சார சபை மாஃபியா என்று அழைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

 

மின்சாரச் சட்டத்தின் 30 வது பிரிவில் சில திருத்தங்களைச் செய்து, மின்சார விலையை அதிகரிக்கும் அதிகாரத்தை அமைச்சு, அமைச்சரவை அல்லது இலங்கை மின்சார சபைக்கு மாற்றுவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்




 

source:newsfirst

views

200 Views

Comments

arrow-up