வெள்ளவத்தைலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பவர்களுக்கு ஒரு செய்தி...
Latest_News
calendar
JUN
14

வெள்ளவத்தைலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பவர்களுக்கு ஒரு செய்தி...

வெள்ளவத்தைலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பவர்களுக்கு ஒரு செய்தி...

காலி வீதியின் வெள்ளவத்தைலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ஒழுங்கையில் இன்று காலை 8 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

கழிவகற்றல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

இதனால் காலி வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் கடற்கரை வீதி ஊடாக பயணிப்பதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

 

கழிவகற்றல்  கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை வெள்ளவத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ஒழுங்கையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

 

ஆகவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

எவ்வாறாயினும் கொழும்பிலிருந்து தெஹிவளை நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து மட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை எனவும் தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கே போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

 

 

source:newsfirst

views

74 Views

Comments

subscribe
arrow-up