இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 12 இந்திய மீனவர்கள் யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பை அண்மித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன் பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் இன்று(27) ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் - அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea Of Sri Lanka கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த 462 இந்திய மீனவர்கள் 62 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை மறுதினம்(29) விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
12 பேர் கொண்ட குழுவே நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரேதமாக இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
126 Views
Comments