அம்பலாங்கொட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன உயிரிழப்பு

அம்பலாங்கொட கந்தமாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியை 2002ஆம் ஆண்டு வழிநடத்திய 41 வயதான தம்மிக்க நிரோஷன என்பவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
201 Views
Comments