சங்கமன்கண்டி கடலில் மூழ்கி மூவர் காணாமல் போயினர்...

அம்பாறை - திருக்கோவில் - சங்கமன்கண்டி கடலில் மூழ்கி மூவர் காணாமல் போயுள்ளனர்.
கடலில் நீராடச்சென்று மூழ்கிய 12 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் அவர்களை காப்பாற்றச் சென்ற நபர் உள்ளிட்ட மூவர் காணாமல் போயுள்ளனர்.
சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரே கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
76 Views
Comments