சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் ரவிச்சந்திரன் அஷ்வின்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
19

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் ரவிச்சந்திரன் அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பிரிஸ்பனில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டார்.

 

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஷ்வின், 106 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 537 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

 

அவர் 8 தடவைகள், ஒரே போட்டியில் 10 விக்கெட்களை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன் 6 தடவைகள் சதமடித்துள்ள அஷ்வின் 14 அரைசதமடித்துள்ளார்.

 

38 வயதான அஷ்வின் 2010ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

 

டெஸ்ட் தொடரில் 11 தடவைகள் தொடர்நாயகன் விருது வென்று இலங்கையின் முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

 

அஷ்வினின் சாதனைகளுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நன்றி தெரிவித்துள்ளது.

 

அஷ்வினுடன் 14 ஆண்டுகள் விளையாடியுள்ளதாகவும் ஓய்வு குறித்து அறிவிக்கும் போது தாம் உணர்ச்சிவசப்பட்டதாகவும் விராட் கோஹ்லி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

ரவிச்சந்திரன் அஷ்வின், 2025 IPL தொடரில் சென்னை அணிக்காக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

80 Views

Comments

arrow-up