தெற்கு அதிவேக வீதி விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கொட்டாவ பகுதியிலிருந்து பாலடுவ நோக்கி பயணித்த கார் லொறியின் பின்னால் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமாகும்.
விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களின் இரண்டு மகள்களுமே காயமடைந்தனர்.
அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
மாத்தறை - நுபே பகுதியை சேர்ந்தவர்களே விபத்திற்குள்ளாகியுள்ளனர்.
84 Views
Comments