பதவிய - போகஹவெவ பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொலை

பதவிய - போகஹவெவ பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று(05) நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந்தெரியாத இருவர் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலயாவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதான மூதாட்டியொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரையில் வௌிப்படாத நிலையில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
83 Views
Comments