மிருசுவில் வாகன விபத்தில் இருவர் காயம்

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்.தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து பயணித்த அதிசொகுசு பஸ் அதே திசையில் பயணித்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும் பஸ்ஸின் நடத்துனருமே காயமடைந்தனர்.
சொகுசு பஸ்ஸின் முன்பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்தவர்களை சுமார் ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியிலேயே மீட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
92 Views
Comments