திரைப்படத் இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம்...

திரைப்படத் இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனை சென்னையில் திருமணம் செய்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அழைப்பாளர்களில் தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா தொழில் ரீதியாக ஒரு மருத்துவர் என்பதோடு ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரர் மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) மதுரை பேந்தர்ஸ் அணிக்காக லீக் மட்டத்தில் விளையாடுகிறார். ரோஹித்தின் தந்தையும் தொழிலதிபருமான தாமோதரன் அணிக்கு சொந்தக்காரர் ஆவார்.
திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தம்பதியினரின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சங்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
770 Views
Comments